மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்துக்கு கூடிய தொண்டா்களின் கூட்டத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் கலங்கிப் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் என அ.தி.மு.க.வினா் தனித்தனியாக நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் டிடிவி தினகரன் தரப்பினர் நேற்று மதுரையை அடுத்த மேலூரில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை நடத்தினர். டிடிவி தினகரன் தலைமையில் நடத்தப்படும் முதல் பொதுக் கூட்டம் என்பதால் அரசியல் விமா்சகா்கள் இந்த கூட்டத்தை உன்னிப்புடன் எதிர் நோக்கி காத்திருந்தனா்.
பெரிய அளவில் கூட்டம் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. உளவுத்துறை கூட குறைந்த அளவு கூட்டம்தான் கூடும் என ரிபோர்ட் அளித்திருந்தது.
ஆனால் அவா்களின் எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் அளவிற்கு கூட்டம் திரண்டது. இதனால் எடப்பாடி தரப்பினா் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அரசு சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவை விட நேற்று கூடிய கூட்டம் அதிகம் என்று தெரிகிறது.
மேலூரில் தினகரன் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேலும் அந்த பகுதியில் இந்த எண்ணிக்கையில் தான் நாற்காலி அமைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தினகரன் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே அந்த நாற்காலிகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன.
டி.டி.வி தினகரன் பேசத் தொடங்கியது முதல் கூட்டம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்த கூட்டத்தை தினகரனே எதிர்பார்க்கவில்லை என்றும், இந்த கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் அதிகப்படுத்தவும் தினகரன் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொண்டர்களின் சப்போர்ட்டுடன் டி.டி.வி.தினகரன் தனது ஆட்டத்தை தொடங்கிவிட்டார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
More from Politics
காணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்? – முதல்வர் விளக்கம்
குமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஒகி …
அதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91
சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …
இந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க!
'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …